மோடியின் தமிழக வருகையை ஒட்டி ஏராளமான அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் நிகழ்கிறது. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை என்ற தொனியில் அமித்ஷா பேட்டி அளித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பா.ஜ.க. அடுத்த தேர்தலில் கூட்டணி அரசில் பங்கேற்கும் என அமித்ஷா அறிவித்திருந்தார். இதனால் பா.ஜ.க. மேடைகளில் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால துணை முதலமைச்சரே’ என அழைக்க ஆரம்பித்தார்கள். பா.ஜ.க. முன்னாள் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை என தெரிவித்திருந்தார். இது அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை தொய்வடைய வைத்திருந்தது. 

இதுபற்றி நேரடியாக பிரதமரிடம் எடப் பாடி பேசினார். அதன்பிறகு அமித்ஷாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. எஸ்.பி.வேலு மணி, அமித்ஷாவை சந்தித்த பிறகுதான் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை, கூட்டணி ஆட்சி என் றெல்லாம் அமித்ஷா பேட்டி யளித்தார். இப்பொழுதே கூட் டணி ஆட்சி என்று சொன்னால் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என அ.தி.மு.க. தரப்பிலிருந்து எடுத்துச் சொல் லப்பட்ட கருத்தை பா.ஜ.க. மேலிடம் ஏற்றுக்கொண்டது. அத்துடன் எடப்பாடி முதல்வர் இல்லை என வேலுமணியும், பா.ஜ.க. முன்னாள் தலைவரும் சேர்ந்து செய்துவந்த பிரச்சாரத்திற்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பா.ஜ.க. முன்னாள் தலைவருக்கு, "கூட்டணிக்கு எதிராக பேசக்கூடாது' என்கிற உத்தரவு டெல்லியிலிருந்தே பறந்துவந்தது. அதன்பிறகு பா.ஜ.க. முன்னாள் தலைவர், தனது போக்கை மாற்றிக்கொண்டார். "எடப்பாடிதான் முதல்வர்' என பேட்டியளித்தார். இது பிரதமரின் தமிழக விசிட்டிலும் எதிரொலிக்கிறது.  

Advertisment

vicepresident1

மாலத் தீவிலிருந்து 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு பறந்துவரும் பிரதமர், தூத்துக்குடி வந்து புதிய ஏர்போர்ட்டை திறந்து வைக்கிறார். அங்கிருந்து திருச்சிக்கு வரும் பிரதமர் ஹெலி காப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத் திற்கு செல்கிறார். இதற்காக அங்கு ஒரு ஹெலிகாப்டர் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் எடப்பாடி பிரதமரை வரவேற்பதற் காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 27-28 தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் ஹெச். ராஜாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் எடப்பாடியின் திட்டம் கேன்சல் செய்யப்பட்டு அவர் பிரதமரை வர வேற்கத் தயாராகிறார். பிரதமர் திருச்சியில் ஓய்வெடுக்கும் நேரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர்களை சந்திக்கிறார். அந்த சந்திப்பில் முன்பு தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தவரும் தற்போதைய மகராஷ்டிரா கவர்னருமான  சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக நியமித்தால், தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க.வின் அரசியல் வளர்ச்சிக்காக உதவுமா என்பதை பிரதமர் கேட்டறிவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

20 தொகுதிகளை வெல்வோம் என கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பா.ஜ.க. மா.த. கொடுத்த ‘பில்டப்பை பொய் என பிரதமரின் முகத்துக்கு நேரே சொன்னவர் சி.பி.ராதாகிருஷ்ணன். தற்போதைய பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரன் சி.பி.ஆரின் சாய்ஸ்தான். அத்துடன் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைக்க அரும்பாடு பட்டவர். அதனால் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆந்திராவில் 21 பாராளுமன்ற சீட்டுகள் கிடைத்தன. மோடியின் ஆட்சி நிலைத்து நிற்க நாயுடுக்கும் மோடிக்கும் இடையே பாலமாக நிற்பவர் சி.பி.ஆர்.தான். தற்போது ராஜினாமா செய்துள்ள ஜெ.கதீப் தன்கருக்குப் பதில் அவரை துணை ஜனாதிபதியாகக் கொண்டுவர பா.ஜ.க. மேலிடம் யோசித்துக் கொண்டுள்ளது. தமிழக தேர்தலை மனதில் கொண்டு இந்த மாற்றத் தைச் செய்யலாமா என தமிழக நிர்வாகிகளிடம் பிரதமர் விவாதிப்பார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். 

Advertisment

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோர் எடப்பாடியுடன் சேர்ந்து பிரதமரை வரவேற்க அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் தமிழக முதல்வருடன் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர். இது தமிழக அரசியலில் வேறுவிதமான அசைவுகளை ஏற்படுத் தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் புதிய பா.ஜ.க. தேசியத் தலைவரை தேர்ந் தெடுக்கவிருக்கிறார்கள். தர்மேந்திரபிரதான் என்கிற அவர் தமிழகத்துக்கு நிதி கொடுக்காத கல்வி அமைச்சர். அத்துடன் தமிழர்களை காட்டுமிராண்டி என்று சொன்ன இனவெறி யரும் இவரே. இவருக்கும் யோகி ஆதித்யநாத் துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிய தலைவர் நியமிக்கப்பட்டதற்குப் பிறகு தான் தமிழக பா.ஜ.க.விற்கு நிர்வாகிகளை நியமிக்க வாய்ப்பு இருப்பதால் அதுபற்றிய சூசகமான தகவல்கள் பிரதமர் விசிட்டின்போது தங்களுக்கு கிடைக்கும் என ஒட்டுமொத்த பா.ஜ.க.வே காத்துக் கிடக்கிறது.      

_____________

vicepresidentbox